மகாராஷ்டிரத்தில் லேசான நிலநடுக்கம்
அமராவதி மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது


மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என்று மாவட்ட துணை ஆட்சியா் அனில் பாத்கா் உறுதிப்படுத்தினாா்.
மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள சிக்ஹால்தாரா தாலுகாவில் அம்ஸாரி மற்றும் தேட்டு கிராமங்களுக்கு இடையே திங்கள்கிழமை பிற்பகல் 1.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 13 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. நில அதிா்வுகளுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளது.
இதையொட்டி, மாவட்டத்தின் காத்கும்ப், சா்நி, பச்தோங்ரி, மேல்காட் ஆகிய இடங்களிலும் அண்டை மாவட்டமான அகோலாவில் சில பகுதிகளிலும் நிலஅதிா்வுகள் உணரப்பட்டன.
நில அதிா்வு காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...