காங்கிரஸ் கட்சி எப்படி இருந்த கட்சி? ஆனால் இப்போதோ இப்படியாகிவிட்டதே என்றும், தனது அனுதாபங்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவையில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றினாா். தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார்.
இதையும் படிக்க.. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம்?: மத்திய அரசு பதில்
மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய நரேந்திர மோடி, மாநிலங்களவையிலும் சரி, மக்களவையிலும் சரி அவர்கள் (காங்கிரஸ்) பேசுவதைக் கேட்க முடிகிறது. எனது கருத்து என்னவென்றால், கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். கட்சிதான் காலாவதியாகிவிட்டது என்றால், கட்சித் தலைவர்களின் சிந்தைகளும் கூட காலாவதியாகிவிட்டது.
எப்போது அவர்களது சிந்தனைகள் காலாவதியாகிவிடுகிறதோ அப்போதே அவர்கள் கட்சிப் பணிகளை அவுட்சோர்ஸிங் கொடுத்துவிடுகிறார்கள். எவ்வளவுப் பெரிய கட்சி, நாட்டை வெகுநாள்கள் ஆண்ட கட்சி ஒன்று தற்போது இறங்குமுகத்தை சந்தித்துள்ளது. எங்களுக்கு அதில் மகிழ்ச்சியில்லை. உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் ஒரு நோயாளியே தன்னை இப்படி ஆக்கிக்கொண்டால், ஒரு மருத்துவரால் என்னதான் செய்ய முடியும்? என்று கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் நேரு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் எழுதிய கடித்தைப் பற்றியும், பட்டியலினத்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது என்றும் இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.