மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் நிறுத்தம்!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

News image

பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் நிறுத்தம்

Updated On :8 பிப்ரவரி 2024, 6:17 am

DIN

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சில பகுதிகளில் இரட்டை பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களிக்கும்போது எந்தவித பிரச்னையும் ஏற்படாத நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நாடு முழுவதும் மொபைல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடைவேளையின்றி நடைபெறுகிறது. மொத்தம் 128,585,760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க நாடு முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கராச்சி, பெஷாவர் உள்ளிட்ட சில நகரங்களில் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.