ராமர் சிலையை மோடி பிரதிஷ்டை செய்யும்போது கைதட்ட வேண்டுமா? புரி சங்கராச்சாரியார்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வந்த அழைப்பிதழை புரி சங்கராச்சாரியார் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ராமர் சிலையை மோடி பிரதிஷ்டை செய்யும்போது கைதட்ட வேண்டுமா? புரி சங்கராச்சாரியார்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வந்த அழைப்பிதழை புரிசங்கராச்சாரியார் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கோவர்தன பீடத்தின் சங்கராச்சாரியார், ஒடிசாவின் புரி நிஷ்சலானந்தா சரஸ்வதி, ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில், மூலவர் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகக்  தெரிவித்துள்ளார்.

மேலும், ராமர் கோயிலில், மூலவரான குழந்தை ராமரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி தனது கையால் பூஜை செய்து, பிரதிஷ்டை செய்வது குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் விதியின்படிதான், மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று புரி சங்கராச்சாரியார் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை தொட்டு, கோயிலின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும்போது, ஒரு சங்கராச்சாரியராக நான் என்ன செய்ய வேண்டும்? அவர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கே நின்றுகொண்டு கைதட்ட வேண்டும் என்றோ அல்லது அவருக்காக வெற்றி முழக்கம் எழுப்ப வேண்டும் என்றோ எதிர்பார்க்கிறீர்களா? எனது பொறுப்புக்கு என்று ஒரு மரியாதை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சநாதன தர்ம சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புரிசங்கராச்சாரியார், (ஆதி சங்கராச்சாரியாரால் உருவாக்கப்பட்ட நான்கு மடங்களில் ஒன்றின் தலைவர்) ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் விழாவுக்கு ஒருபோதும் செல்லப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

எங்கள் மடத்துக்கு அயோத்தியிலிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது. நான் அங்கு வருவதாக இருந்தால், ஒரே ஒரு உதவியாளருடன் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு பேருடன் வந்தாலும் அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொன்னாலும் கூட, அந்த நாளில் நான் அங்குச் செல்ல மாட்டேன் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நான் சற்றும் வருத்தப்படவில்லை, ஆனால் மற்ற சநாதன இந்துக்களைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன், குறிப்பாக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தன்னை மதச்சார்பற்றவராக சித்தரிப்பதில் விருப்பம் இல்லாதவர். அவர் தைரியமானவர் மற்றும் இந்துத்துவாவாதி மற்றும் சிலை வழிபாட்டின் கருத்தாக்கத்தில் பெருமை கொள்கிறார். அவர் தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கோழை அல்ல. ஆனால், சங்கராச்சாரியார் என்ற முறையில் நான் அங்கு என்ன செய்வேன், பிரதமர் மோடி சிலையைத் தொட்டு அங்கு நிறுவும் போது, ​​நான் அவரை கைதட்டி வாழ்த்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com