தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

News image

கலால் வரி அதிகரிப்பு

Updated On :7 ஏப்ரல் 2025, 10:01 am

DIN

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகள் குறையும் என மக்கள் அதிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நிலையில், கச்சா எண்ணெய் கொண்டு பெட்ரோல் உற்பத்தி செய்யும்போது மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையாது, கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் லாபம், ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு வருவாயாக செல்லும் என்று கூறப்படுகிறது.

கலால் வரி என்பது, இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டும் மத்திய அரசு கலால் வரி விதிக்கும். இது உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரி.

இந்த வரியை, உற்பத்தியாளர் செலுத்திவிட்டு, அதனை உற்பத்தி செய்த பொருளின் விலையுடன் சேர்த்து மக்களிடமிருந்து வசூலித்துக் கொள்வார்.

கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும்பட்சத்தில், இவ்வாறு கலால் வரி உயர்த்தப்பட்டிருந்தால், உடனடியாக அது பெட்ரோல், டீசல் விலையிலும் எதிரொலிக்கும். ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், அது நேரடியாக மக்களுக்குச் சென்று சேராமல் தடுத்து அந்த லாபத்தை கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு பங்கிட்டுக் கொள்கிறது.

அதேவேளையில், நிலைமை சீரடைந்து, கச்சா விலை உயரும்பட்சத்தில், ஒன்று மத்திய அரசு கலால் வரியை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த கலால் வரியையும் சேர்த்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகள் மீது திணித்துவிடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.