சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

பிரேஸிலுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு: பிரேஸில் பிரதிநிதி பெருமிதம்

பிரேஸிலுடன் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு பிரதிநிதி தெரிவித்தார்.

AI |XGrok

Updated On :

பிரேஸிலுடன் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு பிரதிநிதி தெரிவித்தார்.

புதுதில்லியில் கார்னகி உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரேஸிலின் பொது சேவைகள் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகத்தின் திட்ட இயக்குநர் கில்ஹெர்ம் அல்மெய்டா தெரிவித்ததாவது, வனப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்புகளை பிரேஸில் செயல்படுத்தி வருகிறது. விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரேஸிலும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, நமது தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் முடியும்.

சமூகம், வளர்ச்சி, அதிக நிலைத்தன்மையுடன் உலகம் இயங்குவது எப்படி? என்பது குறித்து இரு நாடுகளுக்கு ஒத்த கருத்துகளே உள்ளன. பல்வேறு அம்சங்களில் பிரேஸில் மற்றும் இந்தியாவுக்கும் இடையே நிலையான ஒத்துழைப்பு உள்ளது. இப்போது ஒரு வருடத்துக்கும்மேலாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

காடுகளைப் பாதுகாக்க உதவும் தொழில்நுட்பங்கள், அணுகுமுறைகளை நாங்கள் இணைந்து ஆராய்ந்து வருகிறோம். இரு நாடுகளிலும் தொழில்நுட்பம் முக்கியமான ஒன்றாகும். பிரேஸில் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு செழுமையாக இருக்கிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.