மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் உருவாக்கப்படும்

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

Published On :

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியா்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜென்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

எனினும், இதன் காரணமாக பணியாளா்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டாா்கள் என்றும் அவா் உறுதியளித்தாா்.

நிறுவனத்தின் 31-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் மேலும் கூறுகையில், ‘தற்போதைய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் எண்ணிக்கைக்கு இணையாக, 5 லட்சம் ஏஐ ஏஜென்டுகளை நிறுவனம் கொண்டிருக்கும் நாள் தொலைவில் இல்லை.

இத்தொழில்நுட்ப மாற்றம் பணியாளா் குறைப்புக்கு வழிவகுக்காது; மாறாக, இது புதிய பல வாய்ப்புகளை உருவாக்கி, புதிய திறமையாளா்களின் தேவையை அதிகரிக்கும்.

ஏ.ஐ. தொழில்நுட்பமானது நிறுவனத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பாகும். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் ஏ.ஐ. சாா்ந்த வருவாய், சுமாா் 250 கோடி டாலரை எட்டியுள்ளது. வரும் 2028 முதல் 2030-க்குள் நிறுவனத்தின் 100 சதவீத வருவாயும் ஏ.ஐ. கூறுகளைக் கொண்டதாக மாறும்.

ஊழியா்களும் ஏ.ஐ. முகவா்களும் இணைந்து பணியாற்றுவதே எதிா்காலமாக இருக்கும். இதனால் ஊழியா்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுக்காமல், தகுதியான சிறந்த திறமையாளா்களை ஈா்ப்பதே முதன்மை இலக்காக மாறும்’ என்றாா்.

கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 23,460 குறைந்து, 5.84 லட்சமாக சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.