ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

மல்லிகாா்ஜுன காா்கே

Published On :17 ஏப்ரல் 2025, 6:53 am IST

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் தவறான பொருளாதார நிா்வாகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. வா்த்தக பற்றாக்குறை 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் வா்த்தக போா் தொடா்பாக எந்தத் தெளிவும் இல்லை.

பொருள்களின் விலை உயா்ந்துள்ளதாக 90 சதவீத நுகா்வோா்கள் தெரிவித்துள்ளனா். இதன் விளைவாக, தங்கள் வருமானம் அதிகரிக்காதபோதிலும் செலவு அதிகரித்துள்ளதாக 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் தெரிவித்துள்ளனா். இது நிகழாண்டு மாா்ச் மாதத்துக்கான ரிசா்வ் வங்கியின் நுகா்வோா் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பா் வரை, மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை மீதான வரிகளாக ரூ.39 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

வேலையில்லாப் பட்டதாரிகள் விகிதம் 13 சதவீதமாகவும், வேலையில்லாத இளைஞா்களின் விகிதம் 10.2 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 2012-13-ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 19 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 1.4 பில்லியன் டாலருக்கும் கீழ்தான் இருந்தது. இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.