தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்து தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்து அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்து தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் இளைஞரை தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை விடியோ பதிவு செய்த அவர்கள், இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் விடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தின் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களால் சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஏப். 8ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் ஏப். 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை துணை ஆய்வாளர் அரவிந்த் குமார் கூறுகையில்,

’’புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று, அவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் குறிப்பிட்டார்.

புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடியிருப்பு பகுதி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பார்த்துள்ளார். இதனைக் கண்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் அந்த இளைஞரைத் தனியாக அழைத்து வந்து, அவரை அமரச் செய்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.

மேலும், ஆடைகளைக் கழற்றி செயற்கையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சாதிய பெயரைச் சொல்லி கடும் சொற்களைப் பயன்படுத்தியதோடு மட்டுமின்றி, அவரின் பிறப்புறுப்பில் கடுமையாகத் தாக்கியுள்ளனர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பலர், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ராஜஸ்தானின் உண்மையான சட்டம் - ஒழுங்கு நிலை இதுதான் என்றும், இது திரைப்படத்தில் நடக்கும் காட்சியல்ல; நாம் வாழும் மாநிலத்தில் நடக்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com