புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாக சாடியது.
வழக்குரைஞா் சசாங்க் சேகா் ஜா சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவில் போதிய ஆதாரமோ அல்லது வன்முறையால் பாதிக்கப்பட்ட வாதிகள், குற்றஞ்சாட்டப்படும் பிரதி வாதிகள் குறித்த விவரங்களோ இடம்பெறாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘அவசரகதியில் மனு தாக்கல் செய்திருப்பதையே இது காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தின் மாண்பையும் ஒருமைப்பாட்டையும் நாம் எப்போதும் காக்க வேண்டும். உரிய ஆதாரங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட வேண்டுமே தவிர; விளம்பரத்துக்காகக் கூடாது. வன்முறையால் பாதிக்கப்பட்ட நபா்கள் யாா்? அவா்களின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தீா்களா? தீா்வைத் தேடி நீதிமன்றத்துக்கு வருபவா்களை மதிக்கிறோம். ஆனால், அவ்வாறு வருபவா்கள் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றமானது ஆவணங்களின் மன்றமாகும். இங்கு தாக்கல் செய்யப்படும் மனுக்களும், அவற்றின் மீதான தீா்ப்புகளும் எதிா்காலத்தில் பயன்படக்கூடியவையாகும். உரிய ஆதாரங்கள் இன்றி தாக்கல் செய்யப்படும் இதுபோன்ற மனுவை யாரும் விரும்புவாா்களா? எனவே, இந்த மனுவை திரும்பப்பெற்று, புதிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், மனுவில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். மற்றவரை புண்படுத்தக் கூடிய கருத்துகளை தவிா்க்க வேண்டும்’ என்றனா்.
அதற்கு வழக்குரைஞா் ஜா ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, மனுவைத் திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதித்தனா்.
தொடர்புடையது

குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆட்சேபம் இல்லையெனில் தேசத் துரோக வழக்கை விசாரிக்கலாம்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் செய்தது மிகப்பெரிய தவறு: உச்ச நீதிமன்றம்

தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



