பாஜகவின் வெறுப்பு அரசியலே பெஹல்காம் தாக்குதலுக்குக் காரணம்: சஞ்சய் ராவத்
பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால்..


ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ராவத்,
அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
தெற்கு காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் கர்நாடகம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர், 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு ஆமிரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.
வெறுப்பு அரசியல் ஒருநாள் பெரிய பூமரங் போன்று வெடிக்கும். வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல. மேலும் இது மேற்கு வங்காளத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குப் பரவிவரும் வெறுப்பின் விளைவு. ஆளும் கூட்டணியினர் அரசை அமைப்பதிலும், கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அதன்பின்பு மக்களை எவ்வாறு பாதுகாப்பார்கள்? நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர். முழு நாடும் அவரது ராஜிநாமாவை எதிர்பார்க்கிறது. ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவை தாக்கிப் பேசிய ராவத், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று பிரதமர் கூறியதாகவும், ஆனால் அதற்கு மாறாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நாடாளுமன்றத்தில் (பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறித்து) "பொய்" உரைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...