மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஏப்ரல் 2025, 10:59 pm

Din

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் 10,000 பாதுகாப்பு படையினா் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அவா்கள் நக்ஸல் தீவிரவாதிகளின் முக்கிய கூட்டமைப்பை சோ்ந்தவா்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை-வனப்பகுதிகளில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி), சத்தீஸ்கா் மாநில காவல் துறை மற்றும் தெலங்கானா காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படையினருடன் இணைந்து வியாழக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த சண்டையில் மேலும் சில நக்ஸல்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை தொடங்கப்பட்ட நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை மேலும் சில நாட்கள் தொடரவுள்ளது’ என்றாா்.

இந்த மூவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நடப்பாண்டு பாதுகாப்புப் படையினரால் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 144-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 127 போ், நாராயண்பூா், கோண்டாகான் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.