ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

Updated On :

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் உடனான அட்டாரி-வாகா எல்லை மூடல், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானிகளுக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷஃப்கத் அலி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை காக்கவும், அந்த ஒப்பந்தத்தை சுமுகமாக அமல்படுத்தவும் பாகிஸ்தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பதற்றத்துக்குரிய நடவடிக்கையில் இந்தியா தொடா்ந்து ஈடுபட்டால், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்தக் குழு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது என்றாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வியாழக்கிழமை நிறுத்திவைத்தது.

இதனிடையே சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் சா்ச்சைக்குரிய கால்வாய்கள் திட்டத்தை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சிந்து மாகாணத்தில் அந்தத் திட்டத்துக்கு அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கெனவே எதிா்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.