2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை! ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்ட அறிவிப்பு

2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு
ஆக்ஸ்ஃபோர்டு ANI
Updated on
1 min read

ரேஜ் பெய்ட் (Rage Bait) என்ற வார்த்தையை, 2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை என்று ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும், ஆக்ஸ்ஃபோர்டு அகராதி, ஒரு வார்த்தையை தேர்வு செய்து, அதனை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தை என்று அறிவிப்பது வழக்கம்.

அதாவது, ஆன்லைனில் ஒன்றை படிக்கும்போதோ அல்லது அதனைப் பார்க்கும்போதோ, அது வேண்டுமென்றே நம்மைக் கோபப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது போல தோன்றிருந்தால் அந்த உணர்வை வெளிப்படுத்துவதுதான் ரேஜ் பெய்ட் என்கிறார்கள்.

மக்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் பதிவுகள், விடியோக்கள், ரீல்ஸ்களை அதிகம் பதிவிட்டு லைக்குகள் வாங்குவது இப்போது டிரெண்டாகி வருகிறது.

அதாவது ஒருவரை எரிச்சலூட்டும் வகையில் கண்டென்ட் பதிவேற்றும் போது அதனைப் பார்ப்பவர்கள் அதிகம் கோபப்பட்டு கருத்துகளைப் போடுவார்கள். இதன் மூலம் அந்த விடியோ அல்லது ரீல்ஸ்கள் அதிகம் பகிரப்படும். ஒருவர் அதிகம் கோபப்பட்டு கருத்துகளைப் பதிவிடும்போது, அவருக்கு அதுபோன்ற கன்டென்ட் அதிகம் காட்டப்படும். இதனால் அவர் கோபம் அடைகிறார். இந்த செயல்பாடுகளால், ரேஜ் பைட் என்ற வார்த்தையின் பயன்பாடு இணையதளத்தில் இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மூன்று நாள்கள் நடைபெற்ற வாக்கெடுப்பில் 30,000க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தைத் தெரிவித்த பிறகு, 2025 ஆம் ஆண்டிற்கான எங்கள் அதிகாரப்பூர்வ ஆக்ஸ்போர்டு வார்த்தையாக ரேஜ் பெய்டைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2025 ஆம் ஆண்டின் செய்தி சுழலில், சமூக அமைதியின்மை, ஆன்லைன் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட விவாதங்கள் மற்றும் டிஜிட்டல் சமூக நரலன், குறித்த கவலைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எனவே, 2025ஆம் ஆண்டு ரேஜ் பெய்டைப் பயன்படுத்துவது, அது எவ்வாறு அதிகக் கவனம் பெறுகிறது, எவ்வாறு மக்களால் தேடப்படுகிறது உள்ளிட்டவற்றை குறிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எங்கள் மொழித் தரவுகளின்படி, கடந்த 12 மாதங்களில் இந்த வார்த்தையின் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Oxford has released its word of the year for 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com