பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!

தமிழ்நாடு என்ற வார்த்தையைகூட நிதியமைச்சர் உச்சரிக்கவில்லை என்று விமர்சனம்...
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் PTI
Published on
Updated on
1 min read

பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்று தமிழக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட்டில் மிக முக்கியமாக, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 1.15 மணிநேரம் உரையாற்றிய நிதியமைச்சர், ’வானோக்கி வாழும் உலகெல்லாம்’ என்ற செங்கோன்மை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

இந்த நிலையில், பட்ஜெட் உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் பேசியதாவது:

மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்தது. பிப். 5 ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி வாக்காளர்களை குறிவைத்து தேர்தலுக்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட் போல் தெரிகிறது.

ரூ. 12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பின்னர், 8 - 12 லட்சம் வரை 10 சதவிகிதம் வரி வரம்பு எனத் தெரிவித்துள்ளார். இது, மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையானதாகவும் நேரடியாகவும் அறிவிப்பை வெளியிடவில்லை.

நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் நிதியமைச்சரால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தாண்டு பிகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அல்லது வேறெந்த தென் மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com