6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை தகவல்

News image
Updated On :2 பிப்ரவரி 2025, 1:47 pm

DIN

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வறிக்கை, தெலங்கானாவின் மொத்த மக்கள்தொகையான 3.70 கோடியில் 3.5 கோடி (96.9%) தனிநபர்களை உள்ளடக்கியது. மீதமுள்ள 3.1 சதவீதத்தினரில் (16 லட்சம் பேர்) சிலர் ஆய்வறிக்கையில் ஆர்வம் காட்டாததாகவும் கூறினர். தெலங்கானாவில் 1,15,78,457 எண்ணிக்கையில் குடும்பங்கள் உள்ளநிலையில், 1,12,15,134 குடும்பங்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

தெலங்கானா மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 17.43 சதவீதமாகவும், பழங்குடியினர் 10.45 சதவீதமாகவும், முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08 சதவீதமாகவும், இதர பிரிவினர் 13.31 சதவீதமாகவும், முஸ்லிம்களில் இதர பிரிவினர் 2.48 சதவீதம் என்ற நிலையிலும் உள்ளனர்.

தெலங்கானாவில் 61,84,319 பட்டியலினத்தவர்களும், 37,05,929 பட்டியலின பழங்குடியினரும், முஸ்லிம் சிறுபான்மையினரைத் தவிர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 1,64,09,179 பேரும், முஸ்லிம் சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 35,76,588 பேரும், முஸ்லிம் இதர பிரிவில் 8,80,424 பேரும் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை குறித்து, தெலங்கானா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று கூறிய தெலங்கானா குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி, ``சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏழைகளுக்கும், பலவீனமான மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் துறைகளில் தரவுசார்ந்த நலன் மற்றும் தரவுசார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.