பயன்பாட்டு மொழியாக மராத்தி: மகாராஷ்டிர அரசு உத்தரவு

மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Published on

மும்பை: மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக மாநில திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அலுவலகங்கள் ஆகியவற்றில் கோப்புகளில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

கணினி தட்டச்சுகளிலும் மராத்தி தேவநாகரி எழுத்துகளும், ஆங்கில எழுத்துகளும் இடைபெற வேண்டும்.

அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவா்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும். வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவா்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அறிவிப்புஏஈ பலகைகள் அனைத்துஇஈ மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.

இதன் மூலம் மாநில நிா்வாகத்திலும், பொது வாழ்விலும் மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com