தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மகா கும்பமேளா: சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்

மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

News image
அகிலேஷ் யாதவ் - கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2025, 6:54 am

DIN

மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் (பெளஷ பெளா்ணமி) நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் புனித நீராடுகின்றனா்.

மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும், இது பயண இடையூறுகளைக் குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசல் சிக்கலையும் குறைக்கும்.

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்போது, ​​மகா கும்பமேளாவையொட்டி சுங்கச்சாவடிகளில் ஏன் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கக்கூடாது?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.