

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் குறைந்த கட்டணம் செலுத்தி கடந்து செல்வதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) திங்கள்கிழமை(ஜன. 19) வெளியிட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : சுங்கச் சாவடிகளில் கட்டண விலக்கு மற்றும் சலுகை வழங்கப்படும் ஆகிய நடைமுறைகள் யாவும், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (தொகை மற்றும் வசூல் நிர்ணயம்) சட்டங்கள், 2008 இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
அதில் விதி 11 இன் படி, பயனாளர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் நடைமுறையானது குறிப்பிட்ட சில பிரிவு வகனங்கள் மற்றும் தனிநபர்களுக்கே, அதுவும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காவே விலக்களிக்கப்படுகிறது.
கூடுதலாக, விதி 9, சுங்கச்சாவடி பயனாளர்களுக்கு தள்ளுபடி கட்டணத்தில் பாஸ் அளிக்க வழிவகை செய்கிறது. அவற்றுள், சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்குள்பட்ட (அப்பகுதிகளில் இணைப்புச் சாலைகளோ பிற சாலை வசதியோ இல்லையெனில் மட்டுமே) உள்ளூர் பகுதி வணிக பயன்பாடு தவிர இதர வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் மற்றும் தகுதியின் அடிப்படையில் மாவட்ட அளவில் இயக்கப்படும் வாகனங்களுக்கான சலுகைகளும் அடங்கும்.
மேற்குறிப்பிட்ட விதிகளை தேசிய நெடுஞ்சாலை பயனாளர்கள் கடைப்பிடிக்குமாறு என்எச்ஏஐ வலியுறுத்துகிறது. அதன்படி, சுங்கச்சாவடிக் கட்டணத்தில் விலக்கு மற்றும் சலுகை ஆகியவற்றை தகுதியிருப்பின் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் ஒவ்வொருவரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.