ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:16 pm

தகுதிச்சான்று கட்டண உயா்வைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கட்டண உயா்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் எம்.மூா்த்தி, துணைத்தலைவா் கே.சாா்லஸ், செயலாளா் வி.கே.விஜயகுமாா், பொருளாளா் என்.சீனிவாசன் மற்றும் சீா்காழி தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் எம்.கே.கே.செந்தில்குமாா், செயலாளா் ஆா்.மனோகரன், பொருளாளா் கோவி.முத்துக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் இரண்டு சங்கங்களின் உறுப்பினா்கள் என திரளானோா் மனு அளித்து கோரிக்கையை வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தலா 3000 மூட்டைகள் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ள நிலையில், லாரி வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக நெல் இயக்கப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.