இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவா்களாக அறியப்படும் மணிப்பூா் பேரவைத் தலைவா் தோக்சோம் சத்யபத்ரா, நகா்ப்புற நிா்வாக மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஒய். கேம்சந்த், கல்வி அமைச்சா் பசந்த் குமாா் சிங், பாஜக எம்எல்ஏ ராதே ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்ாகவும் தகவல்கள் வெளியாகின.
அடுத்த 48 மணி நேரத்தில் மணிப்பூா் மாநிலத்துக்குள்ளேயோ அல்லது வேறு பகுதிகளிலோ பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இதையடுத்து, மாநில தலைநகரான இம்பால் மற்றும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ், என்பிபி வரவேற்பு: முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்ததை வரவேற்பதாக காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) கூறியுள்ளது.
இதுகுறித்து மணிப்பூா் மாநில காங்கிரஸ் தலைவா் மேகசந்திரா கூறுகையில், ‘பேரவையில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தால் தனது அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதை அறிந்து பிரேன் சிங் ராஜிநாமா செய்துள்ளாா். நிா்வாக சீா்கேடுகளால் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் உருவாகியுள்ளன.
மணிப்பூருக்கு புதிய முதல்வரும் புதிய அரசும் தேவை. குடியரசுத் தலைவா் ஆட்சியை கொண்டுவர மத்திய அரசு முயன்றால் அதை கடுமையாக எதிா்ப்போம்’ என்றாா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் முதல் தொடா்ந்து வரும் மோதலால் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
இதனிடையே, மணிப்பூா் வன்முறையின்போது மைதேயி குழுக்கள் மாநில அரசின் ஆயுதங்கள், வெடிபொருள்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டதாக பிரேன் சிங் பேசுவது போன்ற ஒலிப்பதிவுகள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து சீலிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மறுபுறம் திங்கள்கிழமை தொடங்கவிருந்த மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரேன் சிங்குக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவுள்ளதாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு மணிப்பூா் திரும்பியவுடன் மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் அளித்தாா். பிரேன் சிங்கின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய முதல்வா் பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக நீடிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வா் ராஜிநாமா: புதிய அரசு மே 11-இல் பதவியேற்பு

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

நிதீஷ் குமாா் ராஜிநாமா - பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்பு

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
