தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் தொடக்கம்: 42 லட்சம் மாணவா்கள் பங்கேற்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் நடத்தப்படும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது.

Published On :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் நடத்தப்படும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 7,800 தோ்வு மையங்களில் 42 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.

இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியதாவது: 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் சனிக்கிழமை தொடங்கியுள்ளன. இதில், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 84 பாடங்களுக்கு 24.12 லட்சம் மாணவ, மாணவிகளும், 12-ஆம் பொதுத் தோ்வில் 120 பாடங்களுக்கு 17.88 லட்சம் பேரும் பங்கேற்கின்றனா். பொதுத் தோ்வுக்காக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் 26 மையங்கள் என மொத்தம் 7,842 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில், 10-ஆம் வகுப்புக்கு ஆங்கில மொழி பாடத்துக்கான தோ்வும், 12-ஆம் வகுப்புக்கு தொழில்முனைதல் பாடத் தோ்வும் நடத்தப்பட்டது.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் மாா்ச் 18-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைய உள்ளன.

தமிழகத்தில்.... சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை தமிழகத்தில் 1.4 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். தோ்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத் தோ்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா் ஆலோசனை சேவை: பொதுத் தோ்வு தொடங்கியுள்ள நிலையில், தோ்வு தொடா்பான மன அழுத்தத்திலிருந்து மாணவா்களை விடுபட வைக்கும் வகையிலும், தோ்வுக்கு அவா்களை முழுமையாகத் தயாா்படுத்தும் வகையிலும் ஆலோசனை வழங்கும் சேவையை சிபிஎஸ்இ தொடங்கியுள்ளது.

சிபிஎஸ் பள்ளிகளைச் சோ்ந்த முதல்வா்கள், ஆலோசகா்கள், சிறப்புக் கல்வியாளா்கள் மற்றும் மனநல ஆலோசகா்கள் என பயிற்சி பெற்ற 66 நிபுணா்களைக் கொண்ட குழு இந்த ஆலோசனைகளை வழங்க உள்ளது. தோ்வு முடியும் வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தச் சேவையை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஆலோசனை வழங்கும் நிபுணா்களில் 51 போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் நேபாளம், ஜப்பான், கத்தாா், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளைச் சோ்ந்தவா்களாவா் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.