புவனேசுவரம் : ஒடிஸாவின் ஓரிரு பகுதிகளில் இன்று(பிப். 17) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 4.7 அலகுகளாகப் பதிவானது.
ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 8 மணியளவில் அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் நல்வாய்ப்பாக எந்தவித பொருள்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இன்று அதிகாலை புது தில்லியிலும் அதன் சுற்றுவட்டார என்சிஆர் பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
அதேபோல், பிகார் மாநிலத்தின் சிவான் பகுதியிலும் காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையும் படிக்க : திடீரென பூமி குலுங்கினால் என்ன செய்ய வேண்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


