லக்னௌ : லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
லக்னௌ நகரில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோர் மாநாட்டில் முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை(பிப். 17) பங்கேற்று உரையாற்றினாா்.
அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி அளித்த உத்வேகத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதன்கிழ், மாநிலத்தின் குறு, சிறு நிறுவன தயாரிப்புகளை இணைத்துள்ளோம். அந்தவகையில், மாவட்டந்தோறும் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, ஹோலி, தசரா மற்றும் பிற பண்டிகைகள் வரும் காலங்களில் சீனாவிலிருந்து வரும் பொருள்கள் இந்திய சந்தைகளை மூழ்கடித்திருந்த நிலையில், இன்று, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ முன்னெடுப்பு காரணமாக வரும் பொருள்களால் மக்கள் அவற்றையே வாங்கி பிறருக்கு பரிசளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பெருமிதமும் கொள்கின்றனர்.
நமது ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்குவதில் நாங்கள் சாதித்துக் காட்டியுள்ளோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1947-ல் மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது! - உ.பி. முதல்வர் பேச்சு!

உ.பி. முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது
பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!




