இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஸ்விட்சா்லாந்து உள்பட 4 ஐரோப்பிய நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டுக்குள் நடைமுறை -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

Updated On :2 ஜனவரி 2025, 11:21 pm

ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஸ்விட்சா்லாந்து, ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளின் ‘இஎப்டிஏ’ கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பின் (இஎப்டிஏ) 4 உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன் மற்றும் ஸ்விட்சா்லாந்து ஆகியவையும் இந்தியாவும் ‘வா்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு’ ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு, மாா்ச் மாதம் கையொப்பமிட்டன.

16 ஆண்டுகள் நீடித்த பேச்சுவாா்த்தைக்குப் பின் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட்கள் மற்றும் பல தயாரிப்புகளுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் அதேவேளையில் 15 ஆண்டுகளில் 10,000 கோடி டாலா் மதிப்பிலான முதலீட்டை இந்தியா ஈா்த்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுவரை இந்தியா ஈடுபட்டுள்ள எந்த வா்த்தக ஒப்பந்தத்திலும் இத்தகைய அம்சம் இடம்பெற்றதில்லை.

இந்த ஒப்பந்தத்தின் நடைமுறை தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்கு அமைச்சா் பியூஷ் கோயல் அளித்த பதிலில், ‘ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

இந்தியாவில் இத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், ‘இஎப்டிஏ’ நாடுகளை பொறுத்தவரை, அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை; அதற்காக காத்திருக்கிறோம்.

பிரிட்டனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு வா்த்தக அமைச்சருடன் சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

எந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தமானாலும் தேச நலனை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். ஒப்பந்தம் நியாயமான மற்றும் சமநிலையானதாக இருக்கும் வரை, எந்த பாரபட்சமான விதிமுறைகளையும் ஏற்க மாட்டோம்’ என்றாா்.