2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும்
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்(கோப்புப்படம்)
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.

உடுப்பி மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தர்களுக்கான மிக நீண்ட காத்திருப்பு வரிசை வளாகத்தை திறந்துவைத்து அவர் பேசியதாவது:

ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் நிற்பதற்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பக்தர்களின் நலனில் கோயில் நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை இது உணர்த்துகிறது.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கருத்து முரண்பாடுகள், இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் உழைக்க வேண்டும்.

வளர்ந்த இந்தியா என்பது இனிமேலும் கனவாக இல்லாமல், இலக்காக மாற வேண்டும். அதை நோக்கி நமது சிந்தனைகளை செலுத்த வேண்டும். இதற்கு இடையூறாக இருந்து வரும் பிரிவினை சக்திகளை அடையாளம் காண வேண்டும். பிளவு சிந்தனைகளை விதைத்து, நாட்டுக்குத் எதிரான தவறான தகவல்களைப் பரப்பி வரும் சக்திகளை ஒடுக்க வேண்டும்.

எல்லாரையும் அரவணைத்துச் செல்லும், எல்லாரின் நலனிலும் அக்கறைக் கொண்ட நமது நாட்டின் நற்பெயரைக் காக்கவும், ஜனநாயகத்தை பலப்படுத்தவும், நாட்டுக்கு எதிராக செயல்படுவோரின் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com