தில்லி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா!

மணீஷ் சிசோடியா வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி..
வேட்புமனு தாக்கல் செய்த மணீஷ் சிசோடியா
வேட்புமனு தாக்கல் செய்த மணீஷ் சிசோடியா
Published on
Updated on
1 min read

தில்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருமான மணீஷ் சிசோடியா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

தில்லியின் முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால் ஜன.15ல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று நான் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும், அரவிந்த் கேஜரிவாலின் சிப்பாயாகவும்க ஐங்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தேன். ஜங்புரா மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் அளித்த அன்பை இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கல்வி, சுகாதாரம் மேம்பாடு மூலம் மக்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நான் எனவே வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன் கல்கா தேவியின் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார் மணீஷ் சிசோடியா. பிப்.5ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com