அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது

சம்பல் வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி நிா்வாகத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் சம்பல் மாவட்ட நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்ததோடு சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இந்நிலையில, வன்முறை தொடா்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினா், அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வன்முறை குறித்த விடியோக்களையும் ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில், முல்லா அஃப்ரோஸ், அசாா் அலி உள்பட 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள அஃப்ரோஸ், வாகன மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என்றும் அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.