ஜம்மு-காஷ்மீர் மா்ம உயிரிழப்புகள்: ஒமர் அப்துல்லா நேரில் ஆய்வு!

ரஜௌரி கிராமத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா நேரில் ஆய்வு...
மர்ம நோயால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய ஒமர் அப்துல்லா.
மர்ம நோயால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய ஒமர் அப்துல்லா.
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் ரஜௌரி மாவட்டத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த கிராமத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த 45 நாள்களில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா். இவா்கள் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களுக்குள் சுயநினைவு இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உள்ளூா் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

உயிரிழந்தவா்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும் பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீா் அரசு விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில், பதால் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்ற ஒமர் அப்துல்லா ஆய்வு நடத்தினார். மேலும், உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“உயிரிழப்புகள் குறித்து மாநில அரசுக்கு தகவல் கிடைத்த நாளில் இருந்து, சுகாதாரத்துறையுடன் இணைந்து மற்ற துறைகளும் இந்த சம்பவத்துக்கு பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை நடத்தப்பட்டதில் தீநுண்மி அல்லது பாக்டீரியா போன்ற தொற்றால் உயிரிழப்புகள் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகள் மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்தது கண்டறிந்தோம். 17 உயிரிழப்புகளுக்கான காரணங்கள் இன்னும் கண்டறிய முடியவில்லை. இது நோயால் ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைக்காததால், போலீஸ் விசாரணையும் நடைபெறுகிறது.

மாநில அரசும் மத்திய அரசும் குழுக்கள் அமைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கான காரணத்தை அரிய ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார்.

ஒன்றிணைந்த மத்திய குழு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள், நீா்வளம் ஆகிய அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், கால்நடை வளா்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆய்வகங்களின் நிபுணா்களும் அடங்கிய 16 நபா்கள் கொண்ட மத்திய குழு ரஜௌரிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்து ஆய்வு நடத்தி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com