யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று(ஜன. 20) கடிதம் எழுதினார்.
இதனைத்தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார்.
தில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலங்கானா சட்டப்பேரவைகளிலும் யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் இன்று(ஜன. 21) தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி யுஜிசி வெளியிட்ட வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை வெளியிடுமாறு மத்திய அரசிடம் கோரும் தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்தார்.
பல மாநில அரசுகள், கல்வி நிபுணர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கேரள சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் முன்மொழியப்படுவதாகவும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் இயற்றப்பட்ட சட்டங்களின்படியே செயல்படுவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

புதிய கேரள பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் - முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!

தடை விலகியது!

தடை விலகியது!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



