பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் மூவர்ணக்கொடியை இக்கும் நிகழ்ச்சி இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டாரி பகுதி அமைந்துள்ளது.
இதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி - வாகா பகுதிகள் இருநாடுகளுக்கான எல்லையாக உள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாளில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
இன்று, குடியரசு நாளையொட்டி நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
எல்லையில் இந்திய ராணுவப் படையினரும், பாகிஸ்தான் படை வீரர்களும் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி தேசியக் கொடி இறக்கப்பட்டது. இதில் வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்லையில்லா இசை!

ராணுவ வீரர்களுக்காக... அட்டாரி - வாகா எல்லையில் பாடிய ஏ.ஆர். ரஹ்மான்!

அட்டாரி - வாகா எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான்..! முதல்முறையாகப் பங்கேற்கும் இசையமைப்பாளர்!

பயங்கரவாதிகளுக்கு உதவ எல்லை தாண்டி சட்டவிரோத தொலைத்தொடா்பு சிக்னல்: பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


