பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

டிரம்புடன் பிரதமர் மோடி உரையாடல்...

Published On :

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகக் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்புடன் இன்று(ஜன. 27) பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க அதிபராக 2-ஆவது முறையாக பதவியேற்றதற்கு டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என் அன்பு தோழர் டொனால்ட் டிரம்புடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.

நாங்கள், இருதரப்புக்கும் பரஸ்பர பலனளிக்கும் நம்பிக்கையான ஒத்துழைப்புக்காக பங்களிக்க கடமைப்பட்டுள்ளோம். நம் மக்களின் நலனுக்காகவும் உலக அமைதி, செழிமை, பாதுகாப்புக்காகவும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.