நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

சைஃப் அலிகான் வழக்கு: கைதானவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு நீதிமன்றக் காவல்--

கைது செய்யப்பட்டுள்ள ஷரீஃபுல் முகமது ரோஹில்லா / சைஃப் அலிகான்

Published On :

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் நீடித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஷரீஃபுல்ல போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவரது காவலை இரண்டு நாள்கள் நீட்டிக்குமாறு போலீஸார் கோரினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் பத்து நாள்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. விசாரணை முடிந்துவிட்டது, காவலில் வைப்பதற்கான புதிய காரணம் எதுவும் இல்லை. அவ்வாறு புதிதாக ஏதேனும் தெரியவந்தால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் போலீஸார் அவரை மீண்டும் காவலில் வைக்க கோரலாம் என்று நீதிபதி கூறினார்.

தாணே அருகே கைது செய்யப்பட்ட ஷரீஃபுல்ல, வங்கதேசத்தைச் சேர்ந்தவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை முகமது ஷரீஃபுல்ல இஸ்லாம் ஷெஹ்சாத்தை `பிஜாய் தாஸ்' என்று மாற்றிக்கொண்டார்.

மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீஃபுல், நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

படுகாயமடைந்த சைஃப் அலி கானை வீட்டுப் பணியாளர்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐந்து நாள்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வீடுதிருப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.