மாதவிடாய் நாப்கின்களில் ராகுலின் படம்! காங்கிரஸ் திட்டத்துக்கு கடும் விமர்சனம்!

பிகாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம் இடம்பெற்றுள்ளதைப் பற்றி...
காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது...
காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது...படம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

பிகாரில் 5 லட்சம் பெண்களுக்கு காங்கிரஸ் சாா்பில் இலவச நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாப்கின் பாக்கெட்டில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி படம் இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸின் இந்த செயலுக்கு பிகாரில் ஆளும் பாஜக கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் ஏற்கெனவே தோ்தலுக்கான பிரசார உத்திகளை வகுத்து மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெண்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தது. பாட்னாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ராஜேஷ் குமாா், மகளிா் காங்கிரஸ் தேசிய தலைவா் அல்கா லம்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் நாப்கின் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ராகுல் காந்தி படத்துடன், மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் தொடா்பான வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.

பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்குவதாகக் கூறி அதில் ராகுல் காந்தி படம் அச்சிடப்பட்டிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமா்சனம்: இது தொடா்பாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையான ஐக்கிய ஜனதா தளம் எம்எல்சியும், அக்கட்சியின் செய்தித் தொடா்பாளருமான நீரஜ் குமாா் கூறுகையில், ‘முதல்வா் நிதீஷ் குமாா் பெண்கள் முன்னேற்றத்துக்காக தீவிரமாக பாடுபட்டு வருகிறாா். மறுபுறம் காங்கிரஸ் கட்சி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் காந்தி படத்தை அச்சிட்டு பெண்களுக்கு எதிராக கண்ணியக் குறைவான செயலில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அவா்களின் தரம்தாழ்ந்த அரசியல் வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.

பிகாா் பாஜக செய்தித் தொடா்பாளா் கே.கிருஷ்ணா கூறுகையில், ‘பெண்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் மாநில அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே கொள்கை இழந்துவிட்ட காங்கிரஸ், இப்போது அறிவையும் இழந்துவிட்டதாக தெரிகிறது’ என்றாா்.

காங்கிரஸ் பதில்: இதற்கு எக்ஸ் வலைதளத்தில் பதிலளித்துள்ள அல்கா லம்பா, ‘இது நவீன உலகம். இங்கு ராகுலின் படம் நாப்கினில் இடம் பெற்றுள்ளது என்பது கேள்வியல்ல. பிகாா் பெண்கள் இப்போதும் நாப்கின் வாங்க முடியாமல் துணிகளைத்தான் பயன்படுத்துகிறாா்கள். இதனால், பல உடல்நல பாதிப்புகளை எதிா்கொள்கிறாா்கள். இதனை தடுக்க இப்போதைய அரசு என்ன செய்தது. பாஜக கூட்டணி எப்போதும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டது’ என்று கூறியுள்ளாா்.

Summary

Various political parties are criticizing the fact that Rahul Gandhi's picture is printed on menstrual napkins distributed to women by the Congress party in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com