கைப்பேசியால் ஏற்பட்ட வாக்குவாதம்: நண்பரை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபர் கைது

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர்.
murder
கொலை (கோப்புப்படம்)Din
Published on
Updated on
1 min read

கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரை கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த நபரைக் போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் பதக் சுமார் 15 நாள்களுக்கு முன்பு வேலைக்காக தில்லிக்கு சென்றுள்ளார். அவர், தனது நண்பர்களுடன் பாஸ் குஷ்லா கிராமத்தில் வாடகை அறை ஒன்றில் வசித்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று பதக் மற்றும் கன்ஹையா(20) இடையே கைப்பேசி காணாமல் போனது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ​​ஆகாஷை கன்ஹையா ஐந்தாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகவும், இதனால் அவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

புகாரைத் தொடர்ந்து, ஐஎம்டி மானேசர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கன்ஹையாவை கைது செய்தனர். “கைப்பேசி தொலைந்ததால் ஏற்பட்ட தகராறில், வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து ஆகாஷை தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று குருகிராம் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Summary

Gurugram Police have arrested a man for allegedly killing his friend by pushing him from the fifth floor of a building following an argument over a missing mobile phone, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com