உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்கள் (சிவ பக்தர்கள்) நேற்று மிர்சாபூர் ரயில் நிலையம் வந்தனர். அப்போது அவர்களுக்கும், அங்கிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (CRPF) சேர்ந்த வீரருக்கும் இடையே டிக்கெட் வாங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கன்வாரியாக்கள் சிஆர்பிஎஃப் வீரரை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த விடியோ சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சிவ பக்தர்களின் வருடாந்திர யாத்திரையான கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூலை 23 ஆம் தேதி நிறைவடைகிறது. பக்தர்கள் வெறுங்காலுடன் நடந்து சென்று கங்கையிலிருந்து புனித நீரை குடங்களில் சுமந்து தங்கள் பகுதியில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இந்த யாத்திரையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
Summary
Three kanwariyas were arrested for allegedly assaulting a CRPF jawan following an argument over purchasing tickets at the Mirzapur railway station here, an official said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் கைது
பெட்டிக் கடைக்காரா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
மண்ணெண்ணெய் புட்டியை வீசி வீடு மீது தாக்குதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



