
டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளின் ஊதியம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களில் இருந்து 2%, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பத்தினால் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் வரும் காலங்களில் இதனால் பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
திறன் பொருத்தமின்மை காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசன் கூறியுள்ளார்.
இந்நிலையில் டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசனின் ஊதியம் குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
தகவல்களின்படி, கீர்த்திவாசன் ஆண்டுக்கு ரூ. 26.52 கோடியை ஊதியமாகப் பெறுகிறார். அடிப்படை ஊதியம் ரூ. 1.39 கோடி, சலுகைகள் ரூ. 2.12 கோடி மற்றும் 23 கோடி கமிஷன் ஆகியவை இதில் அடங்கும். கடந்த நிதியாண்டைவிட இந்த ஆண்டு 4% ஊதியம் அதிகம்.
இதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த என்.ஜி. சுப்பிரமணியம், கடந்த 2024 மே மாதம் பதவியில் இருந்து விலகியபோது ஆண்டுக்கு ரூ. 11.55 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார்.
டிசிஎஸ் தலைவர் என். சந்திரசேகரன் ரூ.2.1 லட்சத்தை மட்டும் ஊதியமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.