
மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கவே விரும்புவார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது.
கேரளத்தில் உள்ள கல்லறைகளில், உலோகத்தால் ஆன க்யூஆர் கோடுகள் உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த க்யூஆர் கோடுகளை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள் என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியுமாம்.
இன்ஸ்டாகிராமில் அண்மையில் வெளியான ஒரு விடியோவில், கல்லறைகளில் க்யூஆர் கோடு பதிவு செய்யப்பட்டிருப்பதும், அஞ்சலி செலுத்த செல்வோர், அந்த க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து, அந்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பவரின் வாழ்க்கைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பவரின் பெயர், புகைப்படம், பிறப்பிடம், அவரது வாழ்க்கை உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அதனுடன் அவர்கள் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கதைகள், குடும்பத்தின் விவரங்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பேரன்கள் என அனைவரின் விவரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெலும் கல்லறை அல்ல. நன்கு வாழ்ந்து மறைந்தவர்களின் கதைகள் வாழும் இடம் என்று இதனைச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த புதிய முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறையான கருத்துகளையும் பதிவிட்டிருக்கிறார்கள்.
இதனை விரும்பும் பலரும், தங்களது குடும்பத்தில் மறைந்த உறவுகளுக்கும் இதுபோன்ற ஒரு இணையப் பக்கத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
கல்லறைகளில் இருக்கும் க்யூஆர் ஸ்கேன் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஒருசில பக்கங்களைப் படித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.