பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

எதிரியின் எதிரி நண்பன் என்ற பாணியில் பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கியிருக்கிறது சீனா.
சீன ஏவுகணை
சீன ஏவுகணை
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்திய நிலையில், அவை இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதன் மூலம், பாகிஸ்தானுக்கு பின்னணியில் சீனா செய்த உதவிகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதோடு, இந்திய மண்ணில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன ஏவுகணைகள் மூலம், அதன் உருவாக்க தொழில்நுட்பத்தையும் இந்தியா கண்டுபிடித்துவிடுமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா மீது சுமார் 40 ஜெட் விமானங்கள், அமெரிக்காவின் எஃப்-16 வைப்பர்ஸ், சீனாவின் ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 வகை போர் நிமானங்களையும் பிஎல்-15இ என்ற வானிலிருந்து வானிலிருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

பாகிஸ்தானுக்குப் பின்னணியில் இதுவரை மறைமுகமாக செயல்பட்டு வந்த சீனத்தின் முகம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதோடு, இந்திய தாக்குதல் நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் செயற்கைக்கோள் அமைப்பு மூலம் கண்டறிந்து பாகிஸ்தானுக்கு சீனா தெரிவித்துள்ளதாகவும் இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது, பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்டு இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிஎல்-15இ ஏவுகணைகளின் சேதமான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏவுகணையின் பகுதிகளில், அதன் உந்துவிசை, தகவல், தரவு இணைப்பு, உள்செயலாக்க அலகு உள்ளிட்டவை சேதமடையாமல் அப்படியே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இதோடு, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள், ஏவுகணையின் இரட்டைத்திறன் மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரியுள்ளன. இது சீனாவின் மிக வேகமாக வளரும் இராணுவ தொழில்நுட்பம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உலக நாடுகளின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

இந்த சேதமடைந்த ஏவுகணையின் மூலம், அதன் மீள்உருவாக்கத்தை பாதுகாப்புப் படை பொறியாளர்கள் ஏற்படுத்துவார்கள் என்றும், மேம்படுத்தப்பட்ட பல ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தைக் கண்டறிவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனால், தனது ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குத் தெரிந்துவிடுமோ என்ற கவலையில் சீனா இருப்பதர்கவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com