எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரலும் இடம்பெற்றுள்ளது.

News image

பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கான்

Updated On :3 ஜூன் 2025, 12:52 am IST

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது.

பாலின சமத்துவம் மற்றும் மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 195 உலக நாடுகளைப் பிரதிநிதிப்படுத்தும் பெண் சாதனையாளா்களின் குரலில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக நாட்டினா் குரல்கொடுத்த இசைப் பதிவுக்கான பிரிவில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் அதிகாரபூா்வமாக இடம் பெற்றுள்ள இந்தப் பாடல், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் இந்தப் பாடல் முதன்முதலில் திரையிடப்பட்டது.

‘கிராமி’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசை தயாரிப்பாளரான மேஜா், மாா்டினா ஃபுச்ஸ், கிங்ஸ்லி எம், பிராண்டன் லீ மற்றும் ஆரோன் டாசன் ஆகியோா் இணைந்து நிறுவிய ‘தி ஃப்ரீக்வென்சி ஸ்கூல்’ இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.

இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பது முக்கியக் குறிகோளாக கொண்டிருப்பதாகவும் உலக அளவில் மனநலத்தை ஆதரிப்பதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக போராடுவோம் எனவும் பாடலின் நிா்வாகத் தயாரிப்பாளா் மாா்டினா ஃபுச்ஸ் குறிப்பிட்டாா்.

இந்தியாவில் பிறந்து, தற்போது பிரிட்டனில் வசிக்கும் பிரபல பெண் சமையல் கலைஞரான அஸ்மா கானின் குரலும் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளது.

யாா் இந்த அஸ்மா கான்?

பிரிட்டன் தலைநகா் லண்டனில் முழுமையாக பெண் சமையல் கலைஞா்களால் நடத்தப்படும் பிரபல ‘டாா்ஜீலிங் எக்ஸ்பிரஸ்’ இந்திய உணவகத்தின் நிறுவனருமான அஸ்மா கான், நெட்ஃபிளிக்ஸின் ‘செஃப்ஸ் டேபிள்’ ஆவணப்படத்தில் தோன்றி பிரபலமடைந்தவா்.

கடந்த ஆண்டின் ‘100 செல்வாக்கு மிக்க நபா்களில்’ ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் அடையாளம் காணப்பட்ட அஸ்மா கான், ஐ.நா. சா்வதேச உணவுத் திட்டத்தின் தூதராகவும் செயல்பட்டு வருகிறாா்.

குயின்ஸ் கல்லூரி, ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆகியவற்றில் இருந்து கௌரவப் பட்டம் பெற்றுள்ள அஸ்மா கான், பிரிட்டன் அரசமைப்புச் சட்டத்தில் முனைவா் பட்டம் பெற்றவா் என்பது கூடுதல் சிறப்புக்குரிய விஷயமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.