பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

பிராசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் ஒருவர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
Published on
Updated on
1 min read

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தனது மகளுக்கு மக்களவையில் இடம் ஒதுக்க ஒன்றிய அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கினார் என அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சூராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக அஷோக் சௌதரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பிரஷாந்த் கிஷோர், எனக்கும் எனது மகளுக்கும் எதிராகப் பேசிய அவதூறு கருத்துக்களைத் தொடர்ந்து, நான் அவருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அவரது பதில் திருப்திகரமாக இல்லை. இதன்மூலம், அவர் கூறியதற்கு கொஞ்சமும் அவர் வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதனால், நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுகிறேன், நான் சிராக் பஸ்வானுக்கு பணம் வழங்கியதாக அவர் கூறுவதை நிருபித்து காட்டட்டும் அல்லது உங்களது கருத்தை மன்னிப்புடன் திரும்பப் பெறுங்கள். இந்தப் போராட்டத்தில், ஒருவேளைத் தேவைப்பட்டால் நான் உச்ச நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறேன்.” என அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரான, பிரசாந்த் கிஷோரை, அரசியல் வியாபாரி என குறிப்பிட்ட சௌதரி, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் பணத்துக்காகப் பணியாற்றினார் என விமர்சித்துள்ளார்.

இத்துடன், “நாங்கள் இரண்டாம் தலைமுறையாக முழுவதுமாக அரசியலில் உள்ளவர்கள், எனது மகள் இளம் எம்பி” எனக் கூறியதுடன், ஒரு தலித் பெண்ணின் இந்தச் சாதனையை பிரசாந்த் கிஷோரால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.

முன்னதாக, அஷோக் சௌதரியின் தந்தை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிகார் மாநில அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், அவரது மகளான சாம்பவி, சமஸ்திபூர் தனித் தொகுதியின், லோக் ஜன்ஷக்தி கட்சியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com