
புது தில்லி: நாட்டில் புதன்கிழமை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,302 ஆக உள்ளது. ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
தில்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கத்தில், திடீரென கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 276 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4302 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 4,026 ஆக இருந்தது. கரோனா பாதித்தவர்களில் 7 பேர் நேற்று பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் புதிதாக 60 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 63 பேரும், தில்லியில் 64 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் புதிதாக 65 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று இது 276 ஆக அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது அதிகரித்தாலும் கரோனா பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.