இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

தஹாவூா் ராணா

Updated On :6 ஜூன் 2025, 9:43 pm IST

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

இந்த நிலையில் ராணாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததைத்தொடர்ந்து காணொளி மூலம் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஜூன் 9 ஆம் தேதிக்குள் ராணாவின் விரிவான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.