அகமதாபாத் புறப்பட்டார் மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அகமதாபாத் செல்வது பற்றி...
Mallikarjun Kharge
மல்லிகார்ஜுன கார்கேANI
Published on
Updated on
1 min read

விமான விபத்தின் நிலைமை குறித்து தெரிந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று(சனிக்கிழமை) அகமதாபாத் புறப்பட்டார்.

ஜூன் 12 ஆம் தேதி(வியாழக்கிழமை) அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அகமதாபாத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி கட்டடத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். மருத்துவ மாணவர் விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், விபத்து குறித்து விசாரிக்க உள்துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்காக 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விமான பயணங்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகமதாபாத் செல்கிறார். கர்நாடகத்தில் இருந்து இன்று பிற்பகல் அவர் புறப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் அகமதாபாத் செல்கிறோம். அங்கு சென்று நிலைமையைக் கண்காணித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம்" என்று கூறினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் செல்வதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com