கரோனா பரவல்: புதிய அலையில் மருத்துவர்கள் கண்டறிந்த அதிர்ச்சித் தகவல்!

கரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் புதிய அலையில் மருத்துவர்கள் கண்டறிந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.
corona pti photo
கரோனா நிலவரம்pti file photo
Published on
Updated on
1 min read

கரோனா.. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிவிட்டு, மீண்டும் கடந்த மே மாதம் முதல் உலக நாடுகளில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.

தற்போது உலகம் முழுவதும் அதாவது 2025ஆம் ஆண்டு மத்தியில் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் என்பது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் 2021ஆம் ஆண்டு முதல் பல்வேறு வகைகளில் உருமாறி, அவ்வப்போது தலைதூக்கி வருகிறது.

இது வேகமாகப் பரவும் திறன்கொண்டது, ஆனால், முந்தைய கரோனா வைரஸ்களைப் போல உயிர்கொல்லியாக இல்லாமல், லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. ஆனால், முந்தைய கரோனா வைரஸ்களைக் காட்டிலும் அதி வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதனால், மிக எளிதாக ஒருவருக்கு ஒமைக்ரான் பரவி அது அவர் மூலம் மற்றவர்களுக்கும் பரவிவிடும்.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், கடந்த கால கரோனா பரவல் போல அல்லாமல், இந்த பரவலில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுடனும் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதே.

வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி உள்ளிட்டவையும் கரோனா பாதித்த நோயாளிகளின் பிரச்னையாக உள்ளது. இதுவரை, கரோனா பரவல் அலையாக மாறவில்லை. ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா பாதித்தாலும் வெளி நோயாளியாகவே சிகிச்சை பெற்று குணமடைகிறார்கள். சிலர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதையும் படிக்க. விபத்து கற்றுத்தந்த பாடம்! அவசர அழைப்புக்கு தங்கள் செல்போன் எண்ணை கொடுத்திருந்த பயணிகள்!

இந்த ஒமைக்ரான் வகை கரோன வைரஸ், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தாண்டி உடலுக்குள் செல்லலாம் என்றும், ஏற்கனவே செலுத்திக் கொண்ட தடுப்பூசியின் செயல்திறன் தற்போது கேள்விக்குறியாகியிருப்பதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் பரவும் அதேவேளையில், மற்ற வைரஸ்களின் பரவலும் அதிகரிக்கலாம். இதனால் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இது தொடர்பாக ஆய்வக சோதனைகள் மூலம்தான் உறுதி செய்யப்பட வேண்டும். ஆய்வக சோதனைகள் மூலம் இதனைக் கண்டறிவது எளிது. பெரும்பாலான நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சை தேவைப்படவில்லை. இயல்பாகவே குணமாகி விடுகிறது. சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதே தெரியாமல் சரியாகியும் விடுகிறது.

104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், வறண்ட இருமல் உள்ளிட்டவை ஏற்படும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இதுவரை ஒமைக்ரான் புதிய வகை வைரஸ் அச்சம் ஏற்படும் அளவுக்கு இல்லாவிட்டாலும் நிலைமையை சுகாதார நிபுணர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். மக்கள் கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படைகளை மேற்கொள்வது நல்லது என்றும் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com