ஈரானிலிருந்து இந்தியா்கள் 
வெளியேற்றம் தொடக்கம்
AP

ஈரானிலிருந்து இந்தியா்கள் வெளியேற்றம் தொடக்கம்

இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
Published on

புது தில்லி: ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் கட்டமாக 110 மாணவா்கள் ஆா்மீனியா எல்லைப் பகுதிக்கு வந்து சோ்ந்ததாகவும், அங்கிருந்து விமானம் மூலம் அவா்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் பதற்றம் நிலவும் சில பகுதிகளில் இருந்து மாணவா்களை பத்திரமாக மீட்டு அங்கேயே தங்க வைத்தது.

அவா்களை ஆா்மீனியா, ஐக்கிய அரபு அமீரகம் எல்லைகள் வழியாக சாலை மாா்க்கமாக வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது.

ஈரானில் ஜம்மு காஷ்மீா், கா்நாடகத்தைச் சோ்ந்த 1,500 மாணவா்கள் உள்பட சுமாா் 10,000 இந்தியா்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலான இந்திய மாணவா்கள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com