விமான விபத்தில் இறந்தவர் உடலை சுமந்தபடி உறவினர்கள்
விமான விபத்தில் இறந்தவர் உடலை சுமந்தபடி உறவினர்கள்PTI

அகமதாபாத் விபத்து: 163 உடல்கள் அடையாளம் காணப்பட்டன; 124 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியவர்களில் 163 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில், 124 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகுந்த சேதமடைந்துள்ளதாலும், எரிந்த நிலையில் இருப்பதாலும் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவத் தலைமை நிர்வாகி மருத்துவர் ராகேஷ் ஜோஷி கூறியதாவது,

''இதுவரை 163 டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப்போயுள்ளன. 124 உடல்கள் உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்கள் விரைவில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் சிக்கி 71 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

விமானம் விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக் கல்லூரியில் பயின்ற மேலும் இரு எம்பிபிஎஸ் மாணவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் செய்தியை அவர் நிராகரித்தார்.

விபத்தில் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர் மட்டுமே உயிரிழந்ததாகவும், இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

விபத்தில் இறந்த இரு மருத்துவர்களில் ஒருவர் விமானத்தில் பயணியாக இருந்ததாகவும், மற்றொருவர் சூரத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட அனைவரின் டிஎன்ஏ மாதிரிகளும் புதன்கிழமை காலைக்குள் பரிசோதனை செய்து இறுதி செய்யப்படும் எனப் பேசினார்.

இதையும் படிக்க | 6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com