ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் 20 வயது நிரம்பிய இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால்பூர் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது அருந்திவிட்டு திரிந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, அந்த மாணவியை தனியாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இன்று 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிந்து கோபால்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 10 பேரில், 7 பேர் இளம்பெண்ணைச் சுற்றி அரணாக நின்று கொண்டதாகவும், அதன்பின் மூன்று இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பல முறை சீரழித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கும்பலில் இருந்த 4 பேர், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பது வேதனைக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





