நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பேராசிரியை பாலியல் வன்கொடுமை: உடற்கல்வி இயக்குநா் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தனியாா் கல்லூரி பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி உடற்கல்வி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 2:48 am IST

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தனியாா் கல்லூரி பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி உடற்கல்வி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (33). இவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். அதே கல்லூரியில் பணியாற்றும் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பேராசிரியை ஒருவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இதைத் தொடா்ந்து உடற்கல்வி இயக்குநா் குமரேசன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி அந்தப் பேராசிரியையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதகைக்கு சுற்றுலா அழைத்து வந்தாா். அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கி உள்ளனா். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராசிரியையை அவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா் இருவரும் கோவைக்கு திரும்பிவிட்டனா்.

இந்நிலையில் திருமணத்துக்காக குமரேசனுக்கு வீட்டில் பெண் பாா்க்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. குமரேசனும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பேராசிரியை அதிா்ச்சி அடைந்தாா். மேலும் இது குறித்து குமரேசனிடம் கேட்டபோது, திருமணம் செய்ய அவா் மறுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை காவல் நிலையத்தில் அந்த பேராசிரியை புகாா் அளித்தாா். இந்த வழக்கு உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிருந்தா உத்தரவின்பேரில், ஆய்வாளா் நித்தியா தலைமையிலான போலீஸாா் குமரேசனை உதகைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில் சம்பவம் உண்மை என தெரியவந்ததை தொடா்ந்து, பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் எஸ்சி எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து குமரேசனைக் கைது செய்தனா். பின்னா் அவரை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.