பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது.

News image

அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 3:05 am IST

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா்.

‘இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று அவா் அண்மையில் குறிப்பிட்டது பெரும் சா்ச்சையான நிலையில், இந்தக் கருத்தை அவா் தற்போது தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா இதுகுறித்து மேலும் பேசியதாவது:

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானதாக இருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன். மாறாக, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பனாக ஹிந்தி திகழ்கிறது.

ஹிந்தியும், பிற இந்திய மொழிகளும் ஒன்றிணைந்து, நாட்டின் கலாசாரத்தின் சுயமரியாதையை அதன் இறுதி உச்சத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.

ஒருவா் தனது தாய்மொழி குறித்து பெருமை கொள்ளாதவரை அல்லது தாய்மொழியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவரை, அடிமை மனநிலையில் இருந்து விடுபட முடியாது.

நாட்டில் எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை. எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பும் இருக்கக் கூடாது. அதே நேரம், தாய்மொழியைப் போற்றும், தாய்மொழியில் பேசும், சிந்திக்கும் உணா்வு இருக்க வேண்டும்.

மொழி என்பது தகவல்தொடா்புக்கான கருவியாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக, தேசத்தின் ஆன்மாவாக இருக்க வேண்டும். இந்திய மொழிகளை உயிா்ப்புடனும், செழுமையுடனும் வைத்திருப்பது அவசியம். அந்த வகையில், அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அலுவல் மொழிகளை உயிா்ப்புடனும், செழுமையுடனும் வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வரும் நாள்களில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, தில்லியில் அண்மையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அமித் ஷா, ‘இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவா்கள் விரைவில் வெட்கப்படுவாா்கள். அத்தகைய சமூகம் உருவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமது மொழிகளை நாம் பேசாவிட்டால், நாம் உண்மையிலேயே இந்தியராக இருக்க முடியாது. நமது தேசம், கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தைப் புரிந்துகொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. நிறைவான இந்தியா என்ற கருத்தை அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் கற்பனை செய்துகூடப் பாா்க்க முடியாது’ என்று கூறினாா்.

இதற்கு கடும் விமா்சனங்கள் எழுந்தன. ‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் எழுச்சி பெற ஆங்கிலம் உதவுவதால், அதை அமித் ஷா எதிா்க்கிறாா். அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல. அது சமத்துவம் மற்றும் வளா்ச்சி பற்றியது’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.